கண­வனைப் பய­மு­றுத்­து­வ­தற்­காக தன் மீது மண்­ணெண்­ணெயை ஊற்றி தீமுட்டிக் கொள்ள முற்­பட்ட இரண்டு பிள்­ளை­களின்  தாய் ஒரு­வரும், அவளைக் காப்­பாற்ற முயன்ற கண­வரின் தாயும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக புத்­தளம் மற்றும் கற்­பிட்டி பிரி­வுக்குப் பொறுப்­பான திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ.எம். ஹிசாம் தெரி­வித்தார்.

 

இச்­சம்­ப­வத்தில் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளான உயி­ரி­ழந்த பெண்ணின் கண­வரும் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாலாவி, செவ்­வ­மடு எனும்  பிர­தே­சத்தைச் சேர்ந்த நிபால் நிலாரா (வயது 35) மற்றும் செல்­வ­நா­யகி (வயது 58)  ஆகி­யோரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர்.

உயி­ரி­ழந்த பெண்ணின் மாமி­யா­ரான கண­வரின் தாய் பலத்த தீக்­கா­யங்­க­ளுடன் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த வியாழக்­கி­ழமை இரவு உயி­ரி­ழந்­த­துடன் இப்பெண் சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­துள்ளார்.

உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர்  மனை­வி­யுடன் தினமும் சண்­டை­யிட்­டுக்­கொள்­வ­தா­கவும், நோன்புப் பெருநாள் தினத்­துக்கு முதல்நாள் இரவும் குறித்த கணவர் தனது மனை­வியை அடித்து துன்­பு­றுத்­தி­யுள்­ள­தா­கவும், அன்­றைய தினம் நோன்பு திறந்து விட்டு இப்பெண் தனது கண­வரின் துன்­பு­றுத்­தல்­களைத் தாங்கிக்கொள்ள முடி­யாது வீட்­டுக்கு வெளியில் சென்­றி­ருந்த நிலையில்….

இரவு அவ­ளது பிள்­ளைகள் தனது தாயை வீட்­டுக்கு அழைத்­துள்­ள­தா­கவும், அதன் பின்னர் வீட்­டுக்கு வந்த அப்பெண் தனது கண­வரைப் பய­மு­றுத்­து­வ­தற்­காக தன் மீது மண்­ணெண்­ணெ­யினை ஊற்றிக்கொண்டு தீப்­பெட்­டியைப் பற்ற வைத்தபோது பயந்து போன அப்­பெண்ணின் கண­வரும் கண­வரின் தாயும் விரைந்து தீப்­பெட்­டியைப் பறிக்க முற்­பட்டபோதே  எதிர்­பா­ராத வித­மாக அவர்கள் மூவர் மீதும் தீப்­பற்றிக் கொண்­டுள்­ளமை மேற்­கொள்­ளப்­பட்ட மரண விசா­ர­ணை­களின்போது தெரி­விக்­கப்­பட்­ட­தாக திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரி­வித்தார்.

பின்னர் அவர்கள் மூவரும் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் கண­வரின் தாய் கடந்த வியா­ழக்­கி­ழ­மையும், மனைவி நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை காலையும் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் கணவர் பலத்த தீக்­கா­யங்­க­ளுடன் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

வியா­ழக்­கி­ழமை உயி­ரி­ழந்த பெண்ணின் சடலம் பரி­சோ­த­னையின் பின்னர் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கப்பட்ட­தா­கவும் அவ­ரது இறுதிக் கிரி­யைகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வவு­னி­யாவில் இடம்­பெற்­ற­தா­கவும் தெரி­வித்த திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம், நேற்று முன்­தினம் உயி­ரி­ழந்த பெண் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்­டதால் ஏற்­பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சட­லத்தை நேற்று முன்­தினம் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் தொடர்பில் புத்­தளம் பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version