பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள்

 IMG_4684-1-696x464

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது.

 

இன்று காலை பத்து மணிக்குப் பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள 400க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கும் அவர்களின் பொலிஸ் பிரிவின் அடிப்படையில் ஸ்ரி்க்கர்கள் வண்டியின் முன் புறமும் பின்புறமும் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் பொலிஸ் நிலையத்தின் தொலைப்பேசி இலக்கம், மாவட்ட முச்சக்கர உரிமையாளர் சங்கத்தின் தொலைப்பேசி இலக்கம் என்பவற்றோடு, ஒவ்வொரு முச்சக்கர வண்டிக்கும் தொடர் இலக்கமும் அச்சிடப்பட்டுள்ளது.

 

எனவே பொது மக்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமான பயணங்களுக்கு இந்த ஸ்ரிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துமாறும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.

இன்றைய தினம் சுமார் 100 முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஆரம்ப நிகழ்வாக ஸ்ரிக்கர்கள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்தும் ஏனையவர்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version