முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளதாக எமது செய்தி நிருபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கிலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையில் இருந்து அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள்.