அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் வியப்பு அடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொச்சிக்கடை, போரதோட்டையில் வசிக்கும் இந்த மௌலவிக்கு நான்கு மனைவிகளும், 28 பிள்ளைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

mowlapef-800x445இந்த மௌலவிக்கு நிரந்தரமாக எந்தத் தொழிலும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்த அவர் கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது பை ஒன்றை தவறவிட்டு சென்றுள்ளார்இந்த பை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 9ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பையில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பயணப் பொதியில் பொதுபல சேனா அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் கடிதங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version