எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்
இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.