பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றியவாறு கோவில்குளம் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸூம் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

IMG_20190619_143113

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு மாணவர்களும் 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version