சென்னை: பஸ் டே கொண்டாட்டத்தின்போது கடுப்பான டிரைவர் பிரேக் போட்ட வேகத்தில் பஸ் கூரையிலிருந்து விழுந்த ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே பைக்கில் லேண்ட் ஆனதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
சென்னை போலீஸ் பலமுறை வார்னிங் தந்தும் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தை இன்னும் கைவிடவில்லை.
எத்தனையோ முறை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டும், பஸ் டே கலாச்சாரத்தை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.
இவ்வளவு நாள் லீவு முடிந்து நேற்று சென்னையில் காலேஜ் திறக்கப்பட்டது. முதல்நாள் காலேஜ் என்பதால் பஸ் டே கொண்டாடவும் பட்டது. அதன்படி பஸ் கூரை மீது ஏறி நின்று மாணவர்கள் அட்டகாசம் செய்தார்கள்.
அதில் ஒரு மாணவர் பஸ்ஸின் முன்பக்கம், அதாவது பெயர்பலகை இருக்கும் இடத்தில் தனது காலை தொங்க போட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். வெள்ளை பேண்ட் அணிந்திருந்த இவர்தான் இந்த கும்பலுக்கு லீடர் போல தெரிகிறது.
அந்த பஸ்ஸுக்கு முன்புறம் டூவீலரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். இவ்வளவு பேரையும் எப்படி சமாளித்து ஓட்டுவது என தெரியாமல் டிரைவர் விழித்து கொண்டிருந்தார்.
இதில், மாணவர்கள் பஸ் கூரையில் இருந்து குப்புற விழுந்தனர். அதிலும் அந்த வெள்ளை பேண்ட் மாணவர்தான் முதலில் விழுந்தார்.