இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை ஐ.நா. விசாரிக்க வேண்டும் என கோரிய பிரேரணை ஒன்று கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சுதந்திரமான விசாரணை ஒன்று வேண்டும் என இந்த பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் செரில் ஹார்ட்கேஸில் முன்வைத்த குறித்த பிரேரணை நேற்று (புதன்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் பல மாத கால உழைப்பிற்குப் பின்னர், கனேடிய நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு ஐ.நா.விடம் கோரிய ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த தீர்மானத்தை முன்வைத்த புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் செரில் ஹார்ட்கேஸிலுக்கும் ஆதரவு வழங்கிய அனைத்து கட்சிகளும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version