கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சென்றுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் அவரது வருகையின் பின்னர் மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் அகில இலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம்குரு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.