அகில இலங்கை ஜம்­மி­யத்­துல் உலமா சபையினர் உள்­ளிட்ட அனை­வரும்  இதற்கு  பொறுப்­புக்­கூற வேண்டும்

 

முஸ்­லிம்கள் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக சஹ்ரான் மூன்று சந்­தர்ப்­பங்­களில் பேசினார்.

ஆனால் இது குறித்து எவ­ருமே எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அகில இலங்கை ஜம்மியத்­துல் உலமா சபையினர் உள்­ளிட்ட அனை­வரும் இதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என சூபி முஸ்லிம் பிரிவின்  பிர­தி­நி­தி­யாக பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்த அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி­யுல்லாத் அமைப்பின் செய­லாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் தெரி­வித்தார்.

இன்றும் வஹா­பிச கொள்­கை­யா­ளர்கள் பலர் உள்­ளனர், இது எதிர்­கா­லத்தில் பயங்­க­ர­வா­த­மாக மாறலாம் என்ற அச்சம் உள்­ளது. அதற்கு நல்ல உதா­ரணம் சஹ்ரான் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க நியமிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று சூபி முஸ்லிம் பிரி­வினை சேர்ந்த பிர­தி­நி­தி­யான அல்ஹாஜ் ரஹுமான் மௌல­வி­யிடம் விசா­ரணை நடத்­தி­யது. இதன்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

 அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

தாருல் அதர் அத்­தா­வியா என்ற அடிப்­ப­டை­வாத அமைப்பை இவர்கள் உரு­வாக்­கினர்,. பின்னர் சஹ்ரான் ஜப்­பா­னுக்கு சென்றார்.

சில மாதங்கள் தங்­கி­யி­ருந்து மீண்டும் இலங்­கைக்கு வந்தார். வந்து தாருல் அதர் அத்­தா­வியா அமைப்பில் இணைந்து இயங்கி பின்னர் அதில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக அதில் இருந்து வெளி­யேறி தேசிய தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பை உரு­வாக்­கினார்.

அப்­போது ஆளுநர் அலவி மௌலான ஆயுத குழுக்கள் குறித்த எச்­ச­ரிக்கை விடுத்­தது செய்­திதாள் ஒன்றில் வந்­தது.

எவ்­வாறு இருப்­பினும் தேசிய தொஹித் ஜமாஅத் என்ற அமைப்பை சமூக சேவை குழு­வாக பதிவு செய்து சாதா­ரண குடிசை ஒன்றில் இவர்கள் ஆரம்­பித்­தனர்.

இன்று இது பாரிய பள்­ளி­யாக உள்­ளது. இவர்கள் ஆரம்­பத்தில் இருந்து சூபி முஸ்­லிம்­களை மிகவும் கீழ்த்­த­ர­மாக விமர்­சித்து பிர­சா­ரங்­களை செய்­தனர்.

சூபிக்கள் இஸ்­லா­மி­யர்கள் இல்லை என்ற பிரச்­சா­ரத்தை செய்­தனர். அப்­போது தவ்ஹித் என்ற மாத சஞ்­சிகை ஒன்றும் இவர்­களால் வெளி­யி­டப்­பட்­டது.

இந்த சஞ்­சி­கை­களில் சூபிகள் குறித்து கீழ்த்­த­ர­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தனர்.

சூபி முஸ்­லிம்கள் பொது­வாக அன்­ன­தானம் வழங்­குவோம். இது எமது வழக்கம். இதனை பெற்று சாப்­பி­டு­வது பன்றி இறைச்­சியை சாப்­பி­டு­வ­தற்கு சம­மா­னது என்ற கருத்­துக்­களை வெளி­யிட்­டனர்.

துண்டுப் பிர­சு­ரங்­களும் வெளி­யி­டப்­பட்­டன. இது தொடர்­பாக 2013,2014 ஆண்­டு­களில் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் 11 முறைப்­பா­டு­களை செய்தோம். இது தொடர்பில் மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றத்தில் வழக்கும் பதி­வா­கி­யுள்­ளது.

இந்த வழக்கு விசா­ரிக்­கப்­பட்­ட­போதும் அவர் தனது பிர­சா­ரத்தை கைவி­ட­வில்லை. வழக்கும் கைவி­டப்­பட்­டது.

எமது மனதை புண்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் குறித்து மேஜர் ஜெனரல் லால் பெரே­ரா­விடம் நாம் தெரி­வித்தோம்.

அவர் இவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்தார். ஆனால் இத­னைக்­கூட அவர் பொருட்­ப­டுத்­தாது மேஜர் ஜென­ர­லையே விமர்­சனம் செய்தார்.

பின்னர் தேர்தல் வந்­தது. அதன்­போது காத்­தான்­கு­டியில் சில கட்­சிகள் சஹ்ா­னுடன் உடன்­ப­டிக்கை செய்­தன.

இந்த காலத்தில் அவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதி­ரான கட்­சிக்கு ஆத­ர­வாக செயற்­பட்டார். இந்த கட்­சி­க­ளுடன் அவர் செய்­து­கொண்ட உடன்­ப­டி­கையில் பல அடிப்­ப­டை­வாத கருத்­துக்கள் இருந்­தன.

குறிப்­பாக சூபி சமூ­கத்­துக்கு எதி­ராக அவர் கருத்­துக்­களை முன்­வைத்தார். காத்­தான்­கு­டியில் மாத்­திரம் பத்­தா­யிரம் சூபி மக்கள் உள்­ளனர்.

இவர்­க­ளுக்கு எதி­ராக பல மோச­மான கருத்­துக்­களை முன்­வைத்தார். இந்த உடன்­ப­டிக்­கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசிய கட்சி சார்பில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு எதி­ராக அவர் 2016 ஆம் ஆண்டு உரை­யாற்­றினார் . இதில் கிறிஸ்மஸ் தினம் குறித்தே அதி­க­மாக விமர்­சித்தார்.

பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக அவர் பேசி­ய­தாக நான் அறி­ய­வில்லை. உயிர்த்த தாக்­கு­தலின் பின்னர் வெளி­வந்த பழைய இரு­வெட்­டுக்­களில் பெளத்த மதம் குறித்து பேசி­யதை நான் பார்த்தேன்.

அது­மட்டும் அல்ல 2016இல் இலங்­கைக்கு எதி­ராக, தேசி­யத்­திற்கு எதி­ராக அவர் உரை நிகழ்த்­தினார்.

மூன்று தட­வைகள் இவ்­வாறு அவர் தேசிய எதிர்ப்பு கருத்­துக்­களை கூறினார். இதில் முஸ்லிம் இல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்று கூறி­யுள்ளார். பகி­ரங்க கூட்­டத்தில் இவற்றை அவர் கூறினார்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் பிற்­கா­லத்தில் தீவி­ர­வா­தி­யாக மாறிய வர­லா­றுகள் நிறைய உள்­ளன.

அவ்­வாறு தான் சஹ்­ரானும் மாறி­யி­ருக்க வேண்டும். இஸ்­லா­மிய ஆட்­சிக்கு எதி­ரா­ன­தா­கவே தேசப்­பற்று என்று கூறினார்.

தாய்­நாட்டை நேசிப்­பவர் முஸ்லிம் அல்ல. இலங்­கையின் தேசிய கொடியை ஏந்­தினால் இஸ்­லா­மிய ஆட்­சிக்கு பாதிப்பு, இலங்­கையில் இஸ்­லா­மிய கொடி பறக்க வேண்டும், இலங்கை நாட்டை முஸ்­லிம்கள் கைப்­பற்ற வேண்டும் என அவர் பேசினார்.

அதன் பின்னர் அவ­ரது முகப்­புத்­த­கத்தில் பல வன்­முறை கருத்­துக்கள் உள்­ளன. இது குறித்த தக­வல்­களை உள்­ள­டக்கி கடி­த­மாக தயா­ரித்து ஜனா­தி­பதி காரி­யா­லயம், நீதி அமைச்சர் காரி­யா­லயம் (விஜ­ய­தாச ராஜ­பக ஷ) பிர­தமர் காரி­யா­லயம், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் காளி­யாலம் , அமைச்சர் சாகல ரத்­னா­யக்க வின் காரி­யா­லயம் என்­ப­ன­வற்றில் கைய­ளித்­த­துடன் பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாடு செய்தோம்.

பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் அதி­காரி நாலக டி சில்­வா­வி­டமும் ஒரு பிர­தி­யையும் வழங்­கினோம்.

பின்னர் பிர­தமர் அலு­வ­ல­கத்தில் இருந்து பதில் வந்­தது. இந்த விடயம் பிர­தமர் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது என்ற கடிதம் வந்­தது. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்தும் பல கடி­தங்கள் வந்­தது.

பின்னர் காத்­தான்­குடி அலியார் சந்­தியில் ஒரு பிர­சார கூட்­டத்தை சஹ்ரான் நடத்­தினார். தேசிய தவ்ஹித் ஜமாஅத் இந்த கூட்­டத்தை நடத்­தி­யது.

சூபி முஸ்­லிம்­களை முஸ்­லிம்கள் அல்ல என தாம் ஏன் கூறு­கின்­றார்கள் என்­பதே இந்த கூட்­டத்தின் நோக்­க­மாக இருந்­தது.

இதன்­போது அந்த இடத்தில் குழப்பம் ஏற்­பட்­டது. இதன்­போது சூபி முஸ்லிம் ஒரு­வரை தவ்ஹித் ஜமாஅத் நபர் ஒருவர் வாளால் வெட்­டினார்.

இன்­னொ­ரு­வரும் தாக்­கப்­பட்டார். இது குறித்த பொலிஸ் முறைப்­பா­டுகள் பதி­யப்­பட்­டன. இதில் ஒன்­பது தவ்ஹித் அமைப்­பி­னரும் சூபியை சேர்ந்த நால்­வரும் கைது­செய்­யப்­பட்­டனர்.

இந்த சம்­ப­வத்தின் பின்னர் இவர் காத்­தான்­கு­டியில் இருக்­க­வில்லை. நாம் இந்த சம்­பவம் குறித்து காத்­தான்­கு­டியில் முறைப்­பாடு செய்தோம்.

அதன் பின்னர் சஹ்­ரானை காண­வில்லை. சஹ்ரான் மட்டும் அல்ல இவ­ரது அமைப்பில் பலர் இருந்­தனர்.

நியாஸ் என்ற நபர் தொடர்ச்­சி­யாக இவற்றை பரப்பி வந்தார். சூபிகள் இஸ்­லா­மி­யர்கள் அல்ல என ஜம்­மி­யத்துல் உலமா தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது என்ற கருத்­துக்­களை முன்­வைத்தார்.

சூபிக்கள் முஸ்­லிம்கள் இல்லை என ஜமி­யத்துல் உலமா ஒரு தீர்ப்பை நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வெ ளியிட்­டது.

PAGE-01-CITY-NEWPage1Image0016-dd67ecafd4bd204a6e274031bd24726a3b2cae3aஅதில் சூபிக்கள் கொல்­லப்­பட வேண்டும் என்று கூறி­யுள்­ளது. அது­மட்டும் அல்ல காத்­தான்­குடி ஜம்­மி­யத்துல் உலமா சபை பல அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களை செய்­தது.

நாம் முஸ்­லிம்கள், எம்­மையே கொலை­செய்ய வேண்டும் என ஜம்­மி­யத்துல் உல­மாக கூறு­வதை எம்மால் ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாது. (இந்தக் கருத்தை கூறிய போது அவர் அழுதார்)

தொடர்ச்­சி­யாக காத்­தான்­குடி ஜம்­மி­யத்துல் உல­மா­வினர் சூபி­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

சூபிக்கள் முஸ்லிம் அல்­லா­த­வர்கள், இவர்­க­ளுடன் தொடர்­புகள் இருக்கக் கூடாது இவர்­களை ஒதுக்­கி­வைக்க வேண்டும் என்ற கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

இதனை எதி­ரித்து மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்டோம். தவ்ஹித் ஜமாஅத் அமைப்­பிற்கும் ஜமி­யத்துல் உலமா அமைப்­பிற்கும் இடையில் எந்த நிறு­வன ரீதி­யான தொடர்பும் இருந்­த­தாக தெரி­ய­வில்லை.

ஆனால் இவர்கள் இணைந்து ஒரு அமைப்பை உரு­வாக்­கினர். இவர்கள் அனை­வரும் இணைந்து சூபி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை வெளி­யிட்­டனர். இன்றும் இந்த அமைப்­பினர் காத்­தான்­கு­டியில் உள்­ளனர்.

அடிப்­ப­டை­வாதம் இருந்தால் தீவி­ர­வாதம் வரும். இன்று நாட்டில் இவ்வாறு ஒரு விடயம் உருவாக நீண்டகாலமாக இவர்கள் மத்தியில் அடிப்படைவாதம் இருந்தது.

இது வகாபிசம். இந்த வகாபிசத்தை பின்பற்றும் இருபது பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளன.

இலங்கை முழுவதும் வகாபிசம் உள்ளது, இவர்களில் பலர் மத இறுக்கக் கொள்கை கொண்டவர்கள்.

ஆனால் மிக தீவிரமாக வன்முறையை தூண்டும் கருத்துக்களை சஹ்ரான் வெளிப்படையாக பேசினார். சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள்.

இன்றும் வஹாபிசம் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வஹாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது.

இன்றும் வஹாபிசம் என்று கூறிக்கொண்டு பலர் இயங்கி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version