யாழ். பிரதேசத்தில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இளம் பெண் ஒருவரைக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இளம் பெண்ணை இரண்டு பெண்களும் 2 ஆண்களும் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (21) பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த இளம் பெண் நால்வருடனும் பேராடிய தப்பிச் சென்று சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்த போது நால்வரும் அங்கிருந்து தப்பித்த நிலையில் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version