யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அங்குள்ள எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு, சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிருசுவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.