தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது வீடு அமைந்துள்ள தெருவில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அந்த பக்கமாக கூட்டமாக வந்த தெரு நாய்கள் எதிர்பாராத விதமாக சிறுவனை கடித்து குதறியது.
இதையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், நாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர்.
படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் அந்த பகுதியில் தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்துமாறு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தெரு நாய்கள் சிறுவனை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.