வவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தீர்த்தமாடச் சென்றபோதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் (வயது-27) என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்

B8FC0303-6272-472A-800B-32815E9C2312-1024x576அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த ஊர்மக்கள், சுமார் 20 நிமிடம் போராடி இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version