வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்  ஒன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை  முதலாம் திகதி  மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை  அருந்தியதால் மயக்க நிலை அடைந்த சிறுவனை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

பின்னர்  மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைபலனிளிக்காமல் நேற்று வெள்ளிக்கிழமை  இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தது.

grhtjzikஇவ்வாறு உயிரிழந்தவர்  ஹரிகரன் துசேன்   எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடுஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பிலிருந்த சந்தர்ப்பத்தில்  இச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version