கிளிநொச்சி- திருநகா் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.
திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்பபோது மின்தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த இளைஞன் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார் என்பது குறிப்பிடதக்கதாகும்.