குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான அப் பகுதி கிராம உத்தியோகத்தர் ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான அவர்களை நிகவரெட்டிய நீதிவான் லக்மல் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பொது நிர்வாக அமைச்சர் ஜனாக பண்டார தென்னக்கோனின் உத்தரவின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வைகையில் கிராம உத்தியோகத்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 வயதுடைய சிறுமி நிகவெட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version