முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.