வத்­திக்­கானில், தன்­னிடம் முத்தம் கேட்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க்கு, பாப்­ப­ரசர் பிரான்சிஸ் முத்தம் கொடுத்தார். ஆனால், கடித்­து­வி­டா­தீர்கள் என பாப்­ப­ரசர் வேடிக்­கை­யாக அளித்த பதில் அங்­கி­ருந்­த­வர்களுக்கு சிரிப்­ப­லை யை உரு­வாக்­கி­யது.

பாப்­ப­ரசர் பிரான்சிஸ், வத்­தி­க்கானில் வாரம் தோறும் தன்னை பார்க்க வரு­ப­வர்­களை சந்­திப்பார். நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை நடந்த சந்­திப்­பின்­போது, அங்­கி­ருந்த கன்­னி­யாஸ்­திரி ஒருவர் ‘ஒரு முத்தம் கிடைக்­குமா?’ எனக் கேட்டார்.

pope-francis-2அவரின் கோரிக்­கைக்கு பதி­ல­ளித்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ், நான் முத்தம் தருவேன், ஆனால், நீங்­கள்­அ­மை­தி­யாக இருக்க  வேண்டும், கடித்து விடக் கூடாது என்று வேடிக்­கை­யாக கூறி­யுள்ளார். இதனால் அங்­கி­ருந்­த­வர்கள் சிரித்­து­விட்­டனர்.

கன்­னி­யாஸ்­திரி உறு­தி­ய­ளித்ததை அடுத்து அவ­ரது கன்­னத்தில் பாப்­ப­ரசர் முத்­த­மிட்டார். இதனால் அந்த கன்­னி­யாஸ்­திரி மகிழ்ச்­சி­ய­டைந்­த­வ­ராக காணப்­பட்டார்.

வத்­தி­க்கானில் செயின்ற் பீட்டர்ஸ் சதுக்­கத்தில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் புத்­தாண்டு வாழ்த்து தெரி­வித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேக­மாக இழுத்தார்.

இதனால் பொறுமை இழந்த போப் அவ­ரது கையை வேக­மாக தட்­டி­விட்டார்.இந்த வீடியோ இணை­யத்தில் வேக­மாக பர­வி­யது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

Share.
Leave A Reply

Exit mobile version