ராஜஸ்தானில் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக் காதலை தட்டி கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்கவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் மாமியார்- மருமகள் பிரச்சினை, தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பிரச்சினை, குடும்ப தகராறின் காரணமாக மாமியாரை கொன்ற மருமகள், மாமியாரின் தலையை கடித்த குதறிய மருமகள் என செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மாமியாருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த அவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது.

அந்த இளைஞருடன் பல மணிநேரம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதை கவனித்து வந்த மாமியார் மருமகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

தனது கள்ளக்காதலனிடம் கூறி பாம்பை வாங்கி வரச்செய்து மாமியார் தங்கி இருந்த அறைக்குள் விட்டுள்ளார்.

இதில் பாம்பு கடித்து மாமியார் இறந்துள்ளார். ஆனால், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியதை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடந்த உண்மையை மருமகள் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண் மற்றும் அவரது கள்ளக் காதலன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.!

Share.
Leave A Reply

Exit mobile version