முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவு பகுதியில் கடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11.01.2020) காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், முல்லைத்தீவிலிருந்து மல்லாவி பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்த கடற்படையினரின் வாகனத்துடன் கணவன் மனைவி ஆகிய இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வளைவு பகுதியில் மோதியதில் கணவர் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைதீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.