பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13.01.2020) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் இன்று காலை 7.00 மணியளவில் கொடிகாமம் பகுதியில் ரயிலின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் காலை ரயில் முன்பாக பாய்ந்த அவர் தற்கொலை செய்திருக்கின்றார். அவர் ரயிலில் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.