தன்னை 16 வயது சிறு­வ­னாகக் காட்­டிக்­கொண்டு, சிறு­மி­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த யுவதி ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 8 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

 

தற்­போது 21 வய­தான ஜெம்மா வட்ஸ் எனும் யுவ­திக்கே வைன்­செஸ்டர் கிறவுண் நீதி­மன்­றத்தால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 8 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இவர் சமூக வலைத்­த­ளங்­களில் ஜேக் மத்­தியூ வட்சன் எனும் பெயரில் போலி கணக்­கு­களை உரு­வாக்கி, தன்னை 16 வய­தான சிறு­வ­னாக காட்­டிக்­கொண்டார்.

13 முதல்16 வயது வரை­யான சிறு­மி­க­ளையே இவர் இலக்கு வைத்தார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

Gemma-Watts-as-boy-5சிறுவன் போன்று வேட­மிட்ட தனது புகைப்­ப­டங்­களை சிறு­மி­க­ளுக்கு அனுப்பி அவர்­களை தான் காத­லிப்­ப­தாக ஜெம்மா வட்ஸ் ஆசை வார்த்தை காட்­டினார் என ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பின்னர் அச்­சி­று­மி­களை நேரில் சந்­திப்­ப­தற்­காக இங்­கி­லாந்தின் பல பகு­தி­க­ளுக்கும் பயணம் செய்து, அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என ஜெம்மா வட்ஸ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

20 முதல் 50 சிறு­மிகள் ஜெம்மா வட்­ஸினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என தாம் நம்­பு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிறுவன் வேடத்தில

மேற்­படி சிறு­மிகள் அனை­வரும் தாம் 16 வய­தான இளை­ஞனை காத­லிப்­ப­தாக எண்­ணிக்­கொண்­டி­ருந்­தனர்.

சிறு­மி­களை மாத்­தி­ர­மல்­லாமல் அவர்­களின் பெற்­றோர்கள் சில­ரையும் தான் சிறுவன் என நம்ப வைத்தார் ஜெம்மா வட்ஸ்.

இறு­தியில், ஜெம்மா வட்ஸ் ஓர் ஆண் என்­பதை பொலி­ஸாரே இனங்­கண்டு அறி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.சிறுவன் ஒரு­வ­னுடன் காதல் உறவில் இருப்­ப­தாக மிக இளம் வய­தான ஒரு சிறுமி தன்­னிடம் கூறினார் என ஹாம்ப்­ஷயர் பிர­தே­சத்­தி­லுள்ள மருத்­துவர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு 2018 மார்ச் மாதம் தகவல் தெரி­வித்­த­மையே இவ்­வி­டயம் அம்­ப­ல­மாக வழி­வ­குத்­தது.

இது தொடர்­பாக பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். ஜெம்­மாவை 16 வயது சிறுவன் என்றே பொலி­ஸாரும் முதலில் எண்­ணினர்.

ஜெம்­மாவை லண்டனி­ லுள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்­ற­போது அவர் ஓர் யுவதி என்­பது பொலி­ஸாருக்குத் தெரியவந்தது.

இது குறித்து பொலிஸார் அறி­வித்­த­போது, ஜேக் வட்­ஸனை காத­லித்துக் கொண்­டி­ருந்த சிறு­மிகள் பலரும் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

உல­கமே நின்­று­விட்­டதைப் போன்று உணர்ந்­த­தாக சிலர் கூறினர். சிலர் தற்­கொ­லைக்கும் முயன்­றனர்.

தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்தில் ஜெம்மா வட்ஸ் நீதிமன்றத்துக்கு வந்தபோது…

பொலி­ஸாரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட ஜெம்மா வட்ஸ், தான் ஜேக் எனும் பெயரில் 3 சிறு­மி­க­ளுடன் பாலியல் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­ததை ஒப்­புக்­கொண்டார்.

2018 ஒக்­டோ­பரில் அவர் மற்­றொரு சிறு­மி­யுடன் காணப்­பட்ட நிலையில் மீண்டும் கைது செய்­யப்­பட்டார்.

2019 நவம்பர் மாதம், பாலியல் ரீதி­யான பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை ஜெம்மா வட்ஸ் ஒப்­புக்­கொண்டார்.

இவ்­வ­ழக்கை விசா­ரித்த நீதி­பதி சுசான் இவான்ஸ், ஜெம்மா வட்­ஸுக்கு 8 வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்தார்.

பொலிஸ் இன்ஸ்­பெக்டர் நிகோல்ஸ் பிளம்பர் கூறு­கையில், ‘இது ஓர் அதிர்ச்­சி­க­ர­மான வழக்கு.

குற்­றம்­பு­ரியும் ஒருவர், சிறார்­களை சுரண்­டு­வ­தற்­காக எந்­த­ளவு தூரம் செல்­லக்­கூடும் என்­பதை பெற்­றோர்­க­ளுக்கு இது நினைவூட்டுகிறது’ என்றார்.

‘தமது பிள்ளைகளின் இணைய செயற்பாடுகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான நம்பிக்கையை பெற்றோர்கள் கொண்டிருக்க வேண்டும்’ எனவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version