பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்கள்
பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு இன்றும் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு தகுதிக்கேற்ப தொழில் வாய்ப்பை வழங்குவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வழங்கிய வாக்குறுதியில் எவ் வித மாற்றமும் கிடையாது. நிச்சயம் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
அனைத்து அமைச்சுகள், அரச திணைக்களங்களில் தொழில் வாய்ப்புகளுக்கான கேள்வி நிலை அதிகளவில் காணப்படுகின் றது. இதன் வெற்றிடங்களை பட்டதாரிகளைக் கொண்டு பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளார்கள். அனைவருக்கும் தொழில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமாயின் அதற்கு முறையான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பயிற்சி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும். அரசியல் காரணிகளை விடுத்து தகுதிகளுக்கு ஏற்ப நியமனங்களை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் காணப்படுகின்றது.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பௌத்த பிக்குகளுக்கு கடந்த அரசாங்கம் அபிவிருத்தி அதிகாரியாக தொழில் நியமனங்களை வழங்கி பிரதேச சேவைக்குள் அமர்த்தியுள்ளது. இது முற்றிலும் முறையற்ற செயற்பாடாகும். அனைத்து பௌத்த பட்டதாரி பிக்குகளும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடந்த அரசாங்கம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு பல்வேறு விதத் தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியது.
அந்த நியமனங்கள் முற்றிலும் தேர்தல் சட்டங்களுக்கு முரணானவை என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டமையால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டவர்கள் பட்டதாரிகளின் பட்டியலில் இருப்பார்களாயின் அவர்களுக்கு தொழில் வழங்கப்படும்.
தேசிய பாடசாலைகள் உருவாக்கம்
நாட்டில் உள்ள 330 பிரதேச செயலக தொகுதியில் 124 தொகுதிகளில் தேசிய பாடசாலைகள் கிடையாது. ஆனால் தற்போது நடைமுறையில் 373 தேசிய பாடசா லைகள் காணப்படுகின்றன.
தேசிய பாடசாலைகள் உருவாக்கத்தில் அரசியல் காரணிகள் பாரியளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. நாடு தழுவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படும் என்பது எமது நோக்கமாக காணப்படுகின்றது. 90 நாட்களுக்குள் 373 தேசிய பாடசாலைகள் 500ஆக மாற்றியமைக்கப்படும். 2021ற்கு பிற்பட்ட காலத்தில் இலக்கு வெற்றி பெறும்.
சீருடைக்கான வவுச்சர்
மாணவர்களுக்கு வழங்கும் சீருடை வவுச்சரின் விலை குறைக்கப்பட்டதாக எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.
வவுச்சரின் விலை 525 ரூபா தொடக்கம் 1800 வரை யில் காணப்படுகின்றது. பாடசாலை சீருடையின் விதம் வேறுபட்டமையால் இவ்வாறு தொகையில் மாற்றம் ஏற்ப டுத்தப்பட்டது.
பாடப்புத்தகங்களில் அரசி யல்வாதிகளின் புகைப்படங்கள் இனி அச்சிடப்படாது. அத்துடன் வற் வரி குறைக் கப்பட்டமையால் வவுச்சர் ஊடாக மாண வர்கள் இலாபமான முறையில் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றார்.