அனைத்துப் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் பயிற்­சி யுடன் தொழில் நிய ­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள்  மார்ச் மாதம் முதலாம் திக­தியில் இருந்து முன்­னெ­டுக்­கப்­படும்.
தொழில் வாய்ப்­புகள் குறித்து  பட்­ட­தா­ரிகள் இனி அச்சம் கொள்ள வேண் டாம்.  பட்­டப்­ப­டிப்­பை பூர்த்தி செய்­துள்ள  பௌத்த பிக்­கு­களும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள் என விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­காரம்,  கல்வி அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்றுத் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

பட்­ட­தா­ரி­க­ளுக்கு  தொழில் நிய­ம­னங்கள்
பட்­டப்­ப­டிப்­பை  பூர்த்தி  செய்துவிட்டு இன்றும் தொழில் ­வாய்ப்­பு­களை  எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும்  பட்­ட­தா­ரி­க­ளுக்கு தகு­திக்­கேற்ப  தொழில் ­வாய்ப்­பை  வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  வழங்­கிய   வாக்­கு­று­தியில்  எவ் வித மாற்­றமும் கிடை­யாது. நிச்­சயம்  அனைத்து பட்­ட­தா­ரி­க­ளுக்கும் தொழில் ­வாய்ப்­புகள் வழங்­கப்­படும்.

அனைத்து அமைச்­சுகள், அரச  திணைக்­க­ளங்­களில் தொழில் ­வாய்ப்­பு­க­ளுக்­கான கேள்வி நிலை அதி­க­ளவில் காணப்­படுகின் ­றது. இதன் வெற்­றி­டங்­களை பட்­ட­தா­ரி­களைக் கொண்டு பூர்த்தி செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று  50 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பட்­ட­தா­ரிகள் தொழில் வாய்ப்­பு­களை எதிர்­பார்த்­துள்­ளார்கள்.   அனை­வ­ருக்கும்  தொழில் நிய­ம­னங்கள்  வழங்­கப்­பட வேண்­டு­மாயின் அதற்கு முறை­யான வழி­மு­றை­களை முன்­னெடுக்க வேண்டும்.

மார்ச் மாதம் முதலாம் திக­தியில் இருந்து அனைத்துப் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் பயிற்சி  வழங்கும்   செயற்­றிட்டம் முன்­னெ­டுக்­கப்­படும்.  அர­சியல் கார­ணி­களை  விடுத்து தகு­தி­க­ளுக்கு ஏற்ப நிய­ம­னங்­களை  வழங்க வேண்­டிய  தேவை  அர­சாங்­கத்­துக்குக் காணப்­ப­டு­கின்­றது.

பட்­டப்­ப­டிப்­பை பூர்த்தி செய்த பௌத்த பிக்­கு­க­ளுக்கு  கடந்த அர­சாங்கம்  அபி­வி­ருத்தி அதி­கா­ரி­யாக தொழில் நிய­ம­னங்­களை  வழங்கி   பிர­தேச  சேவைக்குள் அமர்த்­தி­யுள்­ளது. இது முற்­றிலும் முறை­யற்ற செயற்­பா­டாகும். அனைத்து  பௌத்த பட்­ட­தாரி பிக்­கு­களும் ஆசி­ரிய சேவையில் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள்.

0ed22dc81f942b3e89ad2b8f8e9e5baa_XL-777x437ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில்  வழங்­கப்­பட்ட நிய­ம­னங்கள்

இடம்பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் கடந்த அர­சாங்கம்   ஆட்­சியை மீண்டும் கைப்­பற்­று­வ­தற்கு பல்­வேறு   விதத் தில் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை வழங்­கி­யது.

அந்த நிய­ம­னங்கள் முற்­றிலும் தேர்தல் சட்­டங்­க­ளுக்கு முர­ணா­னவை என்று தேர்தல் ஆணைக்­குழு குறிப்­பிட்­ட­மை­யால் தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இதற்கு  எம்மால் ஒன்றும்    செய்ய முடி­யாது.  அப்­போது  தொழில் ­வாய்ப்­பு­களைப் பெற்றுக்கொண்­ட­வர்கள்   பட்­ட­தா­ரி­களின் பட்­டி­யலில் இருப்­பார்­க­ளாயின் அவர்­க­ளுக்கு  தொழில்  வழங்­கப்­படும்.

தேசிய  பாட­சா­லைகள் உரு­வாக்கம்
நாட்டில் உள்ள 330  பிர­தேச செயலக தொகு­தியில் 124 தொகு­தி­களில் தேசிய பாட­சா­லைகள் கிடை­யாது. ஆனால் தற்­போது நடை­மு­றையில் 373  தேசிய  பாட­சா ­லைகள் காணப்­ப­டு­கின்­றன.

தேசிய பாட­சா­லைகள்  உரு­வாக்­கத்தில் அர­சியல் கார­ணிகள்  பாரி­ய­ளவில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. நாடு தழு­விய  ரீதியில் 1000 தேசிய  பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­படும் என்­பது   எமது நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.  90 நாட்­க­ளுக்குள் 373 தேசிய  பாட­சா­லைகள்  500ஆக மாற்­றி­யமைக்­கப்­படும்.  2021ற்கு பிற்­பட்ட காலத்தில்  இலக்கு வெற்­றி ­பெறும்.

சீருடைக்­கான வவுச்சர்  
மாண­வர்­க­ளுக்கு  வழங்­கும்   சீருடை வவுச்­சரின் விலை குறைக்­கப்­பட்­ட­தாக  எதிர்த்தரப்­பினர் முன்­வைக்கும் குற்­றச்­சாட்டு முற்­றிலும் பொய்­யா­னது.

வவுச்சரின்  விலை    525  ரூபா தொடக்கம் 1800  வரை யில்  காணப்படுகின்றது.  பாடசாலை சீருடையின்  விதம் வேறுபட்டமையால் இவ்வாறு   தொகையில் மாற்றம் ஏற்ப டுத்தப்பட்டது.

பாடப்புத்தகங்களில்  அரசி யல்வாதிகளின் புகைப்படங்கள் இனி அச்சிடப்படாது. அத்துடன் வற் வரி குறைக் கப்பட்டமையால் வவுச்சர் ஊடாக மாண வர்கள் இலாபமான முறையில் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version