“அமெரிக்காவில் இந்திய தூதரகத்தின் சார்பில் இலவச வகுப்புகள் மூலம் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. 9 லட்சத்திற்கும் அதிகமான பேர் அங்கு இந்தி பேசி வருகிறார்கள்” என்று அமெரிக்காவிற்கான இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி அமித் குமார் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள், தொழில் தொடங்குபவர்கள் மற்றும் இதர தேவைகளுக்காக செல்பவர்கள் இந்தி கற்று கொண்டால் இந்திய மக்களின் மனங்களை எளிதில் வென்று விடலாம் என்றும் அவர் சொன்னார்.
மேலும் அமெரிக்காவில் பல பள்ளிகளிலும், புகழ்பெற்ற இரண்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மையத்திலும் இந்தி கற்பிக்கப்பட்டு வருகிறது.