பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரியமான அரச குடும்பங்களில் பிரிட்டன் அரச குடும்பமம் ஒன்றாகும். இந்நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அரச பரம்பரைச் சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் ஹரி-மேகன் தம்பதியினர் கூறியிருந்தனர். இதுதொடர்பாக அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும், தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே ஹரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 harry-uk

HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். ஹாரி மற்றும் மேகன் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாதங்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஹாரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version