சென்னை : மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குனர் ராம் மற்றும் சிங்கம் புலி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் சைக்கோ. சைக்கோ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சிங்கிளாக வெளியாகி வருகிறது. நேற்று ரிலீசான தாய் மடியில் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி உள்ளது.

மிஷ்கின் தமிழ் சினிமாவை எப்பொழுதும் உற்று நோக்கும் உன்னதமான கலைஞன். கலையின் மேல் கொண்ட ஆர்வம் தமிழ் சினிமாவின் மேல் கொண்ட காதல் இரண்டும் சேர்ந்த ஒரு மாமனிதன்.

தன் திரைப்படங்களால் மக்களுக்கு கருத்து சொல்வது மட்டும் இல்லாமல் தன் படங்களால் பல வருங்கால இயக்குனர்களை உருவாக்கி வருகிறார் மிஷ்கின் என்பதே உண்மை.

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் தான் மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் ஒரே சாயலில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்

ஆனால் தன் படங்களில் பல வித்தியாசம் மற்றும் பல கதைகள் அதில் ஒரு சமூக அக்கறை உடன் தான் படங்களை எடுத்து வருகிறார்.

உலக சினிமாவை நம் மொழியில் நமக்குக் புரியும் படி வழங்குவது தான் மிஷ்கின் ஸ்டைல்.தமிழ் சினிமா கொண்டாடப் படவேண்டிய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.

வரும் ஜனவரி 24ம் தேதி மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள சைக்கோ படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இளையராஜாவின் இசையில் கைலாஷ் கேர் காந்தக் குரலில் மிஷ்கின் வரிகளில் வலியோடு வெளியாகியுள்ள தாயின் மடியில் பாடல் தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version