எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூலமாக  எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை (சுரேன்) வெற்றி வேட்பாளராக களமிறக்குவதென  19.01.2020 அன்று வவுனியாவில் இடம்பெற்ற தலைமைக்குழு கூட்டத்திலும் 20.01. 2020 அன்று கூடிய யாழ். நிர்வாகக்குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

யாழ். தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடல்களின் பின் நீண்ட அரசியல் வரலாறு கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு ஒதுக்குவதன் மூலம் நிர்வாக திறனும் , மும்மொழி தேர்ச்சியும்  ஆளுமையும் மிக்க ஒருவரை எமது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்பமுடியும் என்பதுடன்  இவரின் வெற்றியின் மூலம் யாழ் மாவட்டத்தில் எமது கட்சி இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியுமெனவும் உறுதியாக நம்புகின்றோம்.

IMG-20200121-WA0002

எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எமது கட்சியின் செயற்பாட்டாளர்கள் தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் எமது வெற்றி வேட்பாளருக்கு உங்களது பூரண ஆதரவினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ  விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version