திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் மலர்ந்து தப்பியோடி விட்டதால் திருமணம் தடைப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துணிக்கடை வைத்திருக்கும் தொழிலதிபர் அர்ஜுன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தொழிலதிபர் அர்ஜுன் தன் மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துதுள்ளார்.

இதனையடுத்து இளம் ஜோடிகளுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது பிப்ரவரி மாதம்இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். திருமண வேலைகள் தொடர்பாக இரண்டு வீட்டு பெரியவர்களும் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அப்போது துணிக்கடை தொழிலதிபருக்கும், வைர கைவினைஞரின் மனைவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இவர்களுடைய காதல் விவகாரம் அவர்களது பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கு  சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இந்த காதல் விவகாரம் குறித்து தெரிய வரும் முன்னரே துணிக்கடை தொழிலதிபர் அர்ஜுனும், வைர கைவினைஞரின் மனைவி ஆகிய இருவரும் ஜோடியாக தலைமறைவாகி விட்டனர்.

இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளும், அவர்களது வீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு இந்த சம்பவம் குறித்து இரு வீட்டாரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் திருமணமும் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது என்கின்றனர்.

அதில்  துணிக்கடை தொழிலதிபருக்கும், அந்த பெண்ணுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே காதல் இருந்துள்ளது.

ஆனால் காதலித்த போது இருவரும் திருமணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது என்கின்றனர். பின்பு தான் தொழிலதிபர் அர்ஜுன் காதலித்த அந்த பெண்ணை வைர கைவினைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்த போது  தங்களுடைய பழைய காதலை புதுப்பித்து கொண்டுள்ளனர்.

இவர்களது காதலால் தங்களுடைய மகன் மற்றும் மகள் திருமணத்திற்கு தடையாக இருக்கும் என்று கூட நினைத்து பார்க்காமல் இருவரும் தலைமறைவான சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version