சென்னையில் பரவி வரும் புதிய வகை நட்பான ‘பெஸ்டி ரிலேஷன்ஷிப்’ (‘Bestie Relationship) சற்று புரியாமல் தலையைச் சுற்றினாலும், அதனால் இளைய தலைமுறையினர் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர்.

காலத்தைப்போலவே காதலும், நட்பும் மாறிக்கொண்டே வருகிறது. ஆண்-பெண் உறவில் திருமணத்தைத் தாண்டி பல்வேறு உறவு நிலைகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

நோ கமிட்மென்ட் ரிலேஷன்ஷிப், ஃபிரெண்டு வித் பெனிஃபிட், ஒன் நைட் ஸ்டாண்ட், அன்மேரிட் கப்புள் என ஆண்-பெண் உறவு நிலையை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் இக்கால தலைமுறையினர் சிறுத்தையின் வேகத்தில் பாய்ந்து செல்கின்றனர் .

இதில் பெஸ்டி ரிலேஸன்ஷிப் என்ற புதியதொரு கண்டுபிடிப்பை கொண்டு வந்துள்ளனர். அவர்களில் பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டினு ரெண்டு வகை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்களை குளோஸ் ஃபிரெண்டுக்குக் கொஞ்சம் மேலே, லவ்வருக்குக் கொஞ்சம் கீழேன்னு சொல்லலாம். லவ்வர்கிட்ட சொல்ல முடியாததைக்கூட இவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க.

இவ்வகை உறவில் ஒரு பையனோ, பெண்ணோ அந்த அளவுக்கு நெருக்கமா இருப்பாங்க. காதலிக்கு பொக்கே வாங்கித் தர்றதுல இருந்து காதலனுக்கு ஷர்ட் வாங்கித் தர்றது வரைக்கும் இவங்களுக்குத் தெரியாம, இவங்க பர்மிஷன் இல்லாம எதுவுமே நடக்காது. பெஸ்ட்டீஸால, பிரிஞ்ச காதலர்கள் சேர்ந்ததும் நடந்திருக்கு; சேர்ந்திருந்த காதலர்களுக்கு நடுவே சண்டை வந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் உண்டு.

பை த பை, பெஸ்ட்டி என்பது, காதலனாகவோ, காதலியாகவோ புரொமோஷனாகிற அத்தனை வாய்ப்புகளும் இருக்கிற ஒரு ரிலேஷன்ஷிப்.

இது புரிஞ்சா நீங்க பிஸ்தா தான்.

Share.
Leave A Reply

Exit mobile version