யாழ்ப்பாணம் – மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த நபர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.