ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டி மனித உருவில் இருந்தது அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டுக்குட்டியை நெட்டிசன்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
மனித முகத்தை ஒத்திருக்கும் இந்த ஆட்டுக்குட்டியை கடவுளின் அவதாரமாக வழிபடுவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அறிவியலாளர்கள் கூறுகையில், ‘இது ‘சைக்ளோபியா’ என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி குறைபாட்டால் ஏற்படுகிறது. இதில் சாதாரண சூழ்நிலைகளில் முக சமச்சீர்மையை உருவாக்கும் மரபணுக்கள் தோல்வியடைகின்றன.
பொதுவாக 16 ஆயிரம் விலங்குகளில் ஒரு விலங்கு இந்த குறைபாட்டுடன் பிறக்கிறது. மனிதர்களிலும் இந்த குறைபாடு மிக அரிதாக காணப்படுகிறது.
இதேபோல் கடந்த மாதம் அர்ஜெண்டினா நாட்டில் மனித முகத்தைப் போன்று உருவம் உடைய கன்றுக்குட்டி பிறந்தது. ஆனால் ஒருசில மணி நேரங்களில் அது இறந்தது’ என தெரிவித்தனர்
சமீபத்தில் மேற்கு வங்காளத்தின் பர்தாமன் மாவட்டத்தில் ஒரு விகாரமான பசு பிறந்தது, வெறும் 4 மாதம் மட்டுமே உயிர்வாழ்ந்த அந்த பசு, உள்ளூர்வாசிகளால் வணங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.