கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இன்று பிற்ப்பகல் டிப்பர் வாகனமும் தனியார்  பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவிளர் மற்றும் பஸ்ஸில் பயணித்த பத்து பயணிகள் உட்ப்பட பதினோரு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் தனியார் பஸ் ஒன்றும் முரசுமோட்டைப் பகுதியை கடக்கும் போது தனியார் பஸ் நிறுத்தப்பட்ட போது  பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_1883

 

 

Share.
Leave A Reply

Exit mobile version