முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார்.
24ஆம் திகதியன்று, கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குறித்த மாணவி உட்பட புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.