குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, 14,022 வீடுகளை  நிர்மாணிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்குபற்றலுடன், நாளை மறுதினம் (01) குருநாகலையில் நடைபெறள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ்,  மகிழ்ச்சியாக வாழும் குழும்பங்களை உருவாக்கும் நோக்கில், வறுமைக் ​கோட்டின் கீழுள்ள சகல குடும்பங்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட நிரந்த வீடொன்றை கையளிப்பதன் மூலம், வெற்றிகரமாக பொருளாதார இலக்கை அடைய, குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக  திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இலக்கை அடைவதற்காக முதலாவது நடவடிக்கையாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய, 2020 ஆம் ஆண்டுக்குள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் குடியிருப்புப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க, மேற்குறித்த வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின்  கீழ், சகல கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, தலா ஒரு வீடு என்ற அடிப்படையில், 60 நாள்களின் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை  எடுத்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version