உலகின் இரண்டாவது மிகப்பெரும் செல்வந்தரும், மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் நிறுவனருமான பில் கேட்ஸின் மகள், தன்னுடைய காதலைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மூத்த மகள், ஜென்னிஃபர் கேத்ரீன் கேட்ஸ் ஆவார். அவரும் எகிப்து நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், நயீல் நாசர் என்பவரும் நீண்ட காலமாக நட்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலர் நயீல் நாசரைப் புகழ்ந்து பாராட்டி, இருவருக்கும் இடையிலான காதலை வெளிப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும், காதல் ஜோடிக்கு கருத்துரை பகுதியில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது, ஜென்னிஃபரின் தந்தை பில் கேட்ஸும், தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதில், தான் முற்றிலும் இன்ப அதிர்ச்சி அடைந்தாகக் கூறியுள்ளார். “ஜென்னிஃபருக்கும், நாசருக்கும் வாழ்த்துகள்”, என்று பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பில் கேட்ஸின் மனைவி, மெலின்டா கேட்ஸும், மகள் ஜென்னிஃபரையும் நயீல் நாசரையும் பாராட்டி வாழ்த்தினார்.

காதலைத் தெரிவித்த அன்றே பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய இவர்களின் காதல் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 

Share.
Leave A Reply

Exit mobile version