திருகோணமலை-பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மூன்று இளைஞர்களும் மரண வீட்டுக்குச் சென்று பின்னர் கடலில் குளிப்பதற்காக சென்ற போது மூவரில் இருவர் தப்பித்த நிலையில் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் சென்று தேடுதல் நடத்திய பின்னர் ஒரு மணி நேரத்துக்குள் சடலத்தை மீட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-வைத்தியசாலை விடுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜெரோம் எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
–