கணவனால் விபசாரத்திற்கு விடப்பட்ட பெண், பள்ளிப் பராயத்தில் தனது தாத்தாவினால் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டதாக, பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து அப்பெண்ணின் தாத்தாவை, மொனராகலைப் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
தனது கணவனால் விபசாரியாக்கப்பட்ட 19 வயதுப் பெண், மொனராகலைப் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அம்முறைப்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து திருமணம் செய்த தனது கணவன் சில மாதங்கள் மட்டுமே, தன்னுடன் சந்தோஷமாக இருந்ததாகவும், பின்னர் தனது கணவனால் அவரது நண்பர்களுக்கும், பிற நபர்களுக்கும் தன்னை விற்பனை செய்து, பணம் சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை துப்பாக்கியினால் சுட்டு கொலை செய்வேன் என்று அச்சுறுத்துவதால் செய்வதறியாத நிலையில் கணவனால் குறிப்பிடப்படும் நபர்களின் இச்சைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன்போதே தனது தாத்தா பற்றிய கதையை வௌியாக்கியுள்ளார். அதாவது,
பள்ளிப்பராயத்தில் பெற்றோர் தன்னை தாத்தா, பாட்டியின் பொறுப்பில் விட்டு, சென்று விட்டனர்.
தான் தனிமையில் இருக்கும் போதெல்லாம், தாத்தா தன்னை பாலியல் வல்லுறவிற்குற்படுத்தி வந்துள்ளார்.
இதனால் தாத்தாவுக்கு பயந்து, காட்டில் மறைந்திருக்க வேண்டிய நிலையும் அடிக்கடி தனக்கு ஏற்பட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் பெண்ணின் கணவனை துப்பாக்கியுடன் கைது செய்ததுடன், பெண்ணின் 77 வயது நிரம்பிய தாத்தாவையும் கைது செய்ததுள்ளனர்.
இவர்கள் விசாரணையின் பின்னர் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேகித்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பொலிசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணைகளில், விபசாரத்திற்கு செல்லுமாறு கணவனின் வற்புறுத்தலை சகிக்கமாட்டாமையிலேயே, இப்பெண் பொலிஸ் நிலையம் வந்து முறையிட்டுள்ளமையும், இப்பெண்ணின் கணவன் காப்புறுதி நிறுவனமொன்றில் முகவராக இருந்து வருகின்றமையும், இவர் தனது மனைவியை பதினையாயிரம் ரூபா முதல் இருபத்தையாயிரம் ரூபா வரையில் தனது நண்பர்களுக்கும், பிறருக்கும் விற்பனை செய்து வந்துள்ளமையும், இதற்கான ஆதாரங்களும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளதுது.
இப்பெண்ணின் மருத்துவ சிகிச்சை அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அப்பெண்ணை பொலிசார் மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.