தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள்.
இவர் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானது. ஆனால், அதை அனைத்தையும் யோகிபாபு மறுத்தார். மேலும் திருமணத் தகவலை நானே அறிவிப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.