திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்கிரீட் குவியல் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, உஹன மற்றும் மகியங்கனை பிரதேசங்களை சேர்ந்த 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மெனிக்ஹின்ன பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.