சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிக்கு காட்டுயானை மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவை சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அடிக்கடி விலங்கினங்கள் தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் காட்டுயானை ஒன்று சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை மிரட்டும் விதமாக விரட்டிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் காட்டுயானை சாலையோரமாக நின்றுகொண்டு இருந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் யானை சாலையை கடப்பதற்காக சிறிது தூரத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளனர்.

அப்போது ஒரு இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென வாகனத்தை ஓட்டிக்கொண்டு சாலையில் சென்றுள்ளார்.

இதனால் அவரை மிரட்டும் விதமாக யானை வேகமாக ஓடிவந்து, பின்னர் அருகில் உள்ள தோட்டத்துக்குள் ஓடியது.

இதுகுறித்து பதிவிட்ட வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான், காட்டு விலங்குகளின் வாழ்க்கையில் மிக கடினமான பகுதி மனிதர்களை சமாளிப்பதுதான்.

யானை சாலையை கடப்பது தெரிந்தும் இருசக்கர வாகனத்தில் ஒருவர் பயணிக்கிறார். ஆனால் மற்ற பயணிகள் யானை செல்லட்டும் என சாலையில் நிற்கின்றனர்.

இதில் நொடிப்பொழுதில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version