பெய்ஜிங்: இந்த காதலர்கள் பக்கம் பக்கமாக பேசவும் இல்லை.. வார்த்தைகளை கொட்டவும் இல்லை.. உடல்ரீதியாக பின்னிப் பிணையவும் இல்லை..
ஆனால் இவர்களின் காதலின் வலிமை மட்டும் ஆழமாக வெளிப்படுகிறது.. அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எல்லாமே உயர்தர சிகிச்சைதான். இந்தசிகிச்சையை அளிப்பதற்காக ஏராளமான மருத்துவர்கள் தங்கள் சொந்த சுக-துக்கங்களை மறந்து ஈடுபட்டு வருகிறார்கள்..
தங்களது வீட்டுக்கு போக முடியாமல், ஆஸ்பத்திரியிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.
குறிப்பாக நர்ஸ்கள்.. இவர்களின் சேவையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.. பெரும்பாலும் இளம் நர்ஸ்கள்தான்.. இந்த சின்ன வயதில் இவ்வளவு பொறுப்பும், அக்கறையும் சேவையும் இவர்களுக்கு வந்துள்ளது மகத்தான ஒன்று..
அதே நேரம் ஏராளமான ஆசாபாசங்களை மனசுக்குள்ளேயே வைத்து புதைத்து கொண்டுதான் இந்த சேவையில் இறங்கி உள்ளனர்.
ஆனால் கொரானாவின் பாதிப்பு காரணமாக அவர் தடுத்து நிறுத்தப்படுகிறார்..
ஆனாலும், ஆஸ்பத்திரி கண்ணாடி தடுப்பு வழியாக காதலியை பார்த்து விட்டு செல்லுமாறு அனுமதிக்கப்படுகிறார்.. கண்ணாடி வழியாக மட்டுமே அவர் காதலியை பார்க்க முடியும்.. ஆனால் பேச முடியாது..
காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சி அவர் கண்களிலும் தெரிகிறது.. காதலனை கண்டதும் நர்ஸ் கண்கள் கலங்குகின்றன..
எதுவுமே பேச வழியில்லாத அந்த சூழலில், அந்த கண்ணாடி தடுப்புகள் வழியே முத்தம் தந்து கொள்கிறார்கள்