முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காணி கொள்வனவு செய்தது தொடர்பில் 227 ஆவணங்களின் மூலப்பிரதிகளும், 8 முதல் பிரதிகளும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இவை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும், பதில் பொலிஸ் மா அதிபரும் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் அவரது அமெரிக்க வங்கிக் கணக்குக்கு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிடப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.