பேஸ்புக்கில் தன்னை பெண்ணாகக் காட்டிக்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏமாற்றி அவர்களது நிர்வணப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்றுக்கொண்ட 21 வயதான இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞர் கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் தகவல் தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றிவரும், மொறட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நபர் சுமார் 3 வருடகாலமாக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் கல்விகற்கும் 50 மாணவர்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் வீடியோகளை  சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து கைப்பற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version