கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதை குறித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் அறிக்கை சமர்பிக்கவுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கிளிநொச்சி தொழில்நுட்ப பீட பகிடிவதை குறித்து பல்கலைகழக மட்டத்திலான விசாரணைகள் நடந்து வருவதுடன், சில மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொலிசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பகிடிவதையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் மாணவர்களின் கைத்தொலைபேசிகள், குற்றப்பலனாய்வு பிரிவினரால் ஆராயப்படவுள்ளதாகவும், இதன் பின்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.