சென்னை: நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) அடித்ததாக கூறப்படும் செய்திகளை எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 1979ம் ஆண்டு, ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் ரஜினி அத்துமீறி நடந்து கொண்டதால், எம்ஜிஆர் கோபமடைந்து ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பேசப்படுவது உண்டு.

நடிகை லதாவுடன் சேரமுடியாத காரணத்தால் தான் அதே பெயருடைய லதாவை ரஜினி திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டுவந்தது.

இது குறித்து நடிகை லதா ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள்.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை, எனக் கூறியிருந்தார்.

gallerye_113448814_2479633

இந்நிலையில், எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டது வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன்.
சண்டை பயிற்சி கலைஞராகன இவர், எம்ஜிஆர்.,க்கு பல படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார்.

இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: கடந்த 1979ம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது.

ஒரு போதும் எம்.ஜி.ஆர், ரஜினியை அடிக்கவில்லை. உண்மையில் ரஜினி மீது எம்ஜிஆர் மதிப்பு வைத்திருந்தார்.

கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version