சீனாவில் ‘கோவிட்-19’ என பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Feeding love to his wife, even at a very old age

சீன நாளிதழான ‘பீப்பிள்ஸ் டெய்லி’யின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது.

அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார். மனைவியின் கண்களின் வழியாக பசி எடுப்பதை அறிந்துக்கொண்ட கணவர் அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார்.

ஆசையாய் மனைவிக்கு உணவு ஊட்டிவிட்டோம் என்று பூரிப்படைந்து மென்மையாக புன்னகைக்கிறார்.

இருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தள்ளாத வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ இன்று காதலர் தினம் ஆதலால் மேலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் உருக செய்திடுவதாக உள்ளது.

வைரலான இந்த வீடியோவை பார்த்தவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version