திருமண வைபவத்தின் இடையில் புகுந்த பெண்ணொருவர், தான் மணமகனின் முதல் மனைவி எனக் கூறியதையடுத்து மேற்படி நபர், மணமகளின் உறவினர்களால் ஆடை கிழியும் அளவுக்கு தாக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

கராச்சியில் அண்மையில் திருமண வைபவம் இடம்பெற்றது. தனது 30களில் உள்ள ஆசிவ் ரபீக் சித்திகீ  (Asif Rafiq Siddiqi )என்பவரே மேற்படி மணமகன் என பிபிசி தெரிவித்துள்ளது.

அவர் ஏற்கெனவே ஒரு தடவையல்ல, இரு தடவைகள் திருமணம் செய்தவர் என அவரின் முதல் மனைவி மெதிஹா சித்திகி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பல தார திருமணம் சட்டபூர்வமானது என்ற போதிலும், மீண்டும்திருமணம் செய்ய விரும்பும் கணவர் தனது மனைவியிடம் ஃ மனைவிகளிடம் சம்மதம் பெற வேண்டியது அவசியமாகும். ஆசிப் சித்தீகி அதைச் செய்யத் தவறிவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பெண் திருமண மண்டபத்துக்குள் புகுந்தவுடன் மணமகளின் உறவினர்களில் ஒருவர், ‘என்ன பிரச்சனை சகோதரி’ என கேட்டமை வீடியோவில் பதிவாகியுள்ளது.

‘இவர் என் கணவர்,இக்குழந்தையின் தந்தை. (பாகிஸ்தானின்) ஹைதராபாத் நகருக்கு 3 நாள் பயணம் செய்யவுள்ளதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார் என மெதிஹா சித்திகீ பதிலளித்தார்.

பின்னர் மணப்பெண்ணை நோக்கி, |இவர் என் கணவர் என உனக்குத் தெரியவில்லையா| என மெதிஹா கேள்வி எழுப்பினார்.

கராச்சியிலுள்ள உருது பல்கலைக்கழகத்தில் ஆசிப் சித்திக்கை முதலில் சந்தித்ததாகவும், 2016 ஆம் ஆண்டு தாம் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஆசிப் அலி சித்திக்கி இரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் மெதிஹா கூறினார்.

ரசநறய

அடுத்து என்ன நடந்தது எனத் தெரியவல்லை. ஆனால், ஸ்தலத்துக்கு பொலிஸார் வரவரழைக்கப்பட்டனர். மணமகளின் உறவினர்கள் ஆசிப் சித்திக்கியைத் தாக்கி, அவரின் ஆடைகளை கிழித்தனர் என பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்

பொலிஸார் ஆசிப் சித்திகியை அருகிலுள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும், அவர்களை மணமகளின் உறவினர்கள் பின் தொடர்ந்து சென்றதுடன், பொலிஸ் நிலையத்திலிருந்து ஆசிப் சித்திக்கி வெளியே வரும் வரை காத்திருந்தனர்.

ஆசிப் சித்திக்கி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மணமகளின் உறவினர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது ஆசிப் சித்திக்கி, ஓடிச் சென்று பஸ் ஒன்றின் அடியில் புகுந்துகொண்டார்.

 

வெளியே வராவிட்டால் பஸ்ஸை எரிக்கப்போவதாக சிலர் அச்சுறுத்தியமை வீடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர் சிலர் தலையிட்டு, மேலதிக வன்முறைகள் ஏற்படுவதை தடுத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக முறைப்பாடு எதுவும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என பிபிசியிடம் தைமுரிஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராவ் நஸிம் தெரிவித்துள்ளார்.

வீடியோ 1:

வீடியோ  2:

Share.
Leave A Reply

Exit mobile version