முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப்பகுதியில், சிறுமியான மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை, ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மூத்த மகளான 15 வயது சிறுமியை கடந்த மூன்று மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, சந்தேக நபரை கைதுசெய்த பொலஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரை நாளை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சிறுமி, சிறுவர் நன்நடத்தை பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.